மார்பகங்களை, இடுப்பை  காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்?

தங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை: பிரபல நடிகைகள் முதல், பெண்ணியவாதிகள் வரை அப்படித்தான் நடந்து கொண்டனர். சிலர் கடவுளர்களே அப்படித்தானே உடையுத்திக் கொண்டுள்ளதாக சித்தரிக்கப் பட்டுள்ளன, நிர்வாணமாகக் கூட சிலைகள், விக்கிரங்கள் உள்ளனவே, அவற்றிற்கெல்லாம் உடை கட்டுப்பாடு ஒன்றுமில்லையா என்பது போன்ற கேள்விகள் எழுப்பி எழுதித்தள்ளினர். நல்லவேளை அவர்கள் தங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை. ஒருவேளை அவர்களும் இதெல்லாம் எங்களது உரிமை என்று பேன்ட், லெக்கிங்ஸ், ஸ்லீவ்லெஸ், டி – ஷர்ட், மினி ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் போன்ற உடைகளுடன் தெருவில் இறங்கியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. முற்றும் துறந்த நடிகைகள் போன்றோ, முனி-ரிஷிக்கள் போன்றோ, சாதாரண மக்கள் இல்லை. நடிகையர், நாகரிக பெண்மணியர் குற்ப்பிட்ட இடங்களில் அவ்வாறு அரைகுறை ஆடைகள் அணிந்து உலா வரலாம், மற்ற இடங்களில் வந்தால் என்னாகும் என்பது அவர்களுக்கே தெரிந்தது தான். நடிகையர்கள் வாழ்க்கையை சாதாரண பெண்ணோடு ஒப்பிட முடியாது. இருப்பினும், இவர்கள் எல்லோரும் போதிக்க வந்து விடுவதே வேடிக்கையாக இருக்கிறது.
நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகளில் பின்பற்றப்படும் “டிரஸ் கோட்”: இந்திய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இந்த “டிரஸ் கோட்” பற்றி எழுதப்படாத விதிமுறைகள் தாம் பின்ப்பற்றப்படுகின்றன[1]. இதெல்லாம் ஹோட்டலுக்கு ஹோடல், ரெஸ்டேரென்டுக்கு ரெஸ்டாரென்ட், சாப்பிடும் இடம், உணவு முதலியவற்றிற்கு ஏற்றபடி மாறும் என்று கூறியும் “இதுதான் ஏற்புடைய உடை” என்று குறிப்பிட்டு சொல்லாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். பொதுவாக நவீன, மேற்கத்தைய உடைகளை அணிந்து கொண்டு வந்தால் ஒன்றும் கேட்பதில்லை. கோட்-சூட் போட்டுக் கொண்டு வரும் “பிசனஸ் கிளாஸ்” வகையும் உண்டு, அரைகுறை ஆடைகளுடன் வரும் நவநாகரிக வகைகளும் உண்டு[2]. பெண்கள் உடல் பாகங்கள், மார்பங்கள் தெரியும் படி எல்லாம் ஆடை அணிந்து கொண்டு வருகிறார்கள். அத்தகைய முறைகேடுகளை மேனாட்டு ஊடகங்களே எடுத்துக் காட்டியுள்ளன. அதாவது, அங்கேயே அத்தகைய கட்டுப்பாட்டு சிந்தனை இருக்கும் போது, இந்தியாவில் வேறு மாதிரி சிந்திப்பது சரியா-தவறா என்று அவர்களே புரிந்து கொள்ளலாம். ஆனால், வேடிக்கையென்னவென்றால், வேட்டிக் கட்டிக் கொண்டு சென்றாலோ, ஷூ போடாமல் சென்றாலோ உள்ளே அனுமதி கிடையாது.
நீதி மன்றங்களில் உடை கட்டுப்பாடு: உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்ற, மாஜிஸ்ட்ரேட் கோர்ட், டிரைபூனல் போன்ற நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கருப்பு கௌன் அணிந்து கொண்டு செல்கிறார்கள், வருகிறார்கள். ஆண் வழக்கறிஞர்கள்[3] மற்றும் பெண் வழக்கறிஞர்கள்[4] இப்படித்தான் உடையணிந்து வர வேண்டும் என்று “பார் கவுன்சில்” விதிமுறைகளில் சொல்லப்பட்டுள்ளன[5]. ஆங்கிலேயர் காலம் வரை நீதிபதி தலையில் கூட விக் எல்லாம் வைத்திருந்தால், பிறகு விட்டு விட்டார்கள். ஏன் வேறு நிறத்தில் இருக்கக் கூடாது அல்லது அது இல்லாமல் ஏன் நீதிமன்றத்தில் நுழையக் கூடாது என்று யாரும் கேட்பதில்லை.  ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த இந்த உடைமுறையை மாற்ற வேண்டும் என்று அவ்வப்போது, வழக்கறிஞர்களே கேட்டுப் பார்த்தாலும்[6], இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. 1685ல் இங்கிலாந்து அரசன் சார்லஸ் II இறந்தபோது, துக்கம் அனுஷ்டிக்க இத்தகைய உடை உபயோகித்ததாகவும், அதனையே வழக்கறிஞர்கள் பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது[7]. எது எப்படியாகிலும் கருப்பு துக்கத்துடன் சம்பந்தப்பட்டது என்பது தெரிந்த விசயம்.
ஆபாசப்படங்கள், விளம்பரங்களின் நிலை என்ன? 
பெண்களின் மீது ஏன் அதிகமான குற்றங்கள் நடக்கின்றன என்று, அரசு வெளியிட்டிருந்த அறிக்கையின்[8] மீதான கட்டுரையை நான் ஏற்கெனெவே பதிவு செய்துள்ளேன்[9]. பெண்களை வைத்துக் கொண்டு சினிமா, கொச்சையான விளம்பரங்கள், ஆபாசப் படங்கள், புளூ பிளிம்கள் / ஊதா சினிமாக்கள், நடனங்கள், விபச்சாரம்,  என பல நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் கூடாது, பெண்களை கேவலப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, செக்ஸ்-பொருள்களாக மதிக்கிறது என்றால், அவற்றை ஏன் பெரிய கம்பெனிகளே ஊக்குவிக்கிறது? கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, பதிலுக்கு பொருட்களை விற்று பணத்தை அள்ளுகிறது? அதில் பெண்களின் பங்கு இல்லாமல், ஒன்றும் நடக்காது. அத்தகைய விஷயங்களில் பெண்கள் ஈடுபடுகிறர்கள் எனும்போது, அதற்கு என்ன காரணம் என்று பெண்கள் கூற வேண்டும். ஆண்கள் தாம் காரணம் என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. இல்லை வறுமை என்று பொருளாதார காரணத்தைச் சொல்ல முடியாது, ஏனென்றால், இன்று பணத்திற்காக மட்டுமல்லாது புகழிற்காக பணக்காரப் பெண்களே அத்தகைய விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். சும்மா இருக்கும் எந்த ஆணும் எந்த பெண்ணிடமும் சென்று செக்ஸ் வைத்துக் கொள் என்று கூறிக் கொண்டு செல்ல மாட்டான். பெண்ணும் அப்படியே ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆகவே மனோதத்துவ ரீதியில் ஆராய்ந்தால், அதன்படி விளக்கம் கொடுக்க வேண்டும், தீர்வு காண வேண்டும். குற்றவியல் என்று பார்க்கும் போது, மனோதத்துவ ரீதியில் எல்லா காரணங்களும் எடுத்துக் கொள்ளப் படும். பிறகு தான், முக்கியமான காரணம் எது என்று ஆராயப் படும். காலக்கட்டங்களில், குறிப்பிட்ட காரணி தான் காரணம் என்றால், அதனை அவர்கள் எடுத்துக் காட்டுவார்கள். அத்தகைய நிதர்சனத்தை, யதார்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். குற்றங்கள் ஏற்படாத முறையில் ஆடை அணிவது எப்படி என்பதனை பெண்கள் தான் வரையறுக்க வேண்டும். அவர்களே கூறிவிட்டால் பிரச்சினை இருக்காது.
மார்பகங்களை, இடுப்பை,  காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்?
[10]: சமூகத்தில் ஏற்கெனவே ஏற்புடைது என்பதை வைத்துதான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒருசிலர், நூறு-ஆயிரம் பேர் மற்றவர்களை விட மாறுபடுகின்றனர் என்பதற்காக இருக்கின்ற சட்ட-திட்டங்களை மாற்றி, அதுதான் எல்லோருக்கும் பொறுந்து என்று திணிக்க முடியாது. “நாகரிகம்” என்றால் என்ன, “நாகரிகமாக உடை அணிவது என்றல் என்ன”  என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? இல்லை, முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்? அப்படியும் எடுத்து வந்தால், எந்த அளவிற்கு காட்டலாம், காட்டக் கூடாது எனெல்லாம் வரையறுத்துக் கொண்டிருக்க முடியுமா? பிறகு, அதற்கும் நியாயம் கற்பித்து பேச ஆரம்பித்து விடுவார்கள். “நிர்வாணம்” என்றால் என்ன என்று பேசவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இன்று பொதுவாக, ஷாப்பிங் மால், பார்லர், நட்சத்திர ஹோட்டல்கள், ஏன் கல்லூரிகள்-பள்ளிகள் முதலிய இடங்களில் பெண்கள் எப்படி ஆடையுடுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெரிந்த விசயமே.

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.