சீரழிவுக்கு செல்லும் இளைஞர்கள்! மது போதை பிடியில்
இன்று வளர்ந்து வரும் உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகின்றது.
ஆனால் சமீப காலமாக நமது வி.களத்தூர் அதன் சுற்றியுள்ள ஊர்களில் போதைக்கு அடிமையாகும் பழக்கம் அதிகரித்து விட்டது. சொல்வதற்கு வாய் கூசும் அளவுக்கு பல கீழ்தரமான, கேவலமான காரியங்கள் நம்மை ஆட்டிப்படைத்து வருகின்றன. இந்த காரியங்களை குறிப்பிட்ட தெருவினரோ, குறிப்பிட்ட வயதினர்களோ, குறிப்பிட்ட மதத்தினர்கள் தான் செய்கின்றார்கள் என பிரிக்க முடியாது. அந்த வகையில் பல கேவலமான காரியங்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவி ஊரே சீரழிந்து சின்னாபின்னமாகி விட்டது எனலாம்.
அந்த வகையில் நமதூர் மக்கள் சென்றுக்கொண்டிருக்கும் இந்த தவறான பாதை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்த பதிவை பதிகிறோம்.
“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)
நமது பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் போதைக்கு அடிமையாகும்போது குடும்பத்திலும் சமூகத்திலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. குடும்பத்திற்குள் ஒற்றுமை குலைந்து விடுகின்றது. அவ நம்பிக்கை ஏற்படுகின்றது.
(வீணான செலவு களால்) வறுமை ஏற்படுகிறது. குடும்பத்திற்கென்று இருந்த மானம்-மரியாதை, கௌரவம் இழக்கப்படுகின்றது. இதனால் மனச்சோர்வு ஏற்படும் அளவிற்கு செல்கின்றனர். பிள்ளைகளுடைய எதிர்கால கனவுகள், இலட்சியங்கள் நாசமாகின்றன. இலக்கில்லாமல் வாழ்வு அழிந்து விடுகின்றது. புத்தகங்களை சுமந்து செல்ல வேண்டியவர்கள் பல்வேறுபட்ட நோய்களை சுமந்தவர்களாக நடமாட ஆரம்பிக்கின்றனர். பதினாறு மற்றும் பதினெட்டு வயதை அடையும் போதே வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.
கல்லூரிக்கு சென்று படிப்பை முடித்து பட்டதாரிகளாக வருவதற்குப் பதிலாக போதைக்கு அடிமையாகி பரிதாபமாக வருகிறார்கள். இதில் சில நல்ல பிள்ளைகள் தப்பித்து விடுகிறார்கள்.
எந்தவொன்றையும் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் சில நேரம் அவர்களது அழிவுக்கே காரணமாகி விடுகின்றது. தவறான நண்பர்களுடன் பழகும்போது சிகரட் புகைத்தல், பியர் குடித்தல் என்ற பழக்கத்துடன் பீடா, பாபுல், பான்பராக், மாவா, ஸாதா என்ற போதைக்கு ஆளாகி, இறுதியில் எல்லா போதைக்கும் அடிமைகளாகி விடுகின்றார்கள்.
இந்த பழக்கத்தால் வி.களத்தூர் இளைஞர்கள், பள்ளி செல்லும் சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் அடிமையாகி வருகின்றனர். இதன் காரணமாக பல நல்ல மாணவர்களும் இதனால் வழி தவற வாய்ப்புள்ளது. இந்த போதையை பயன்படுத்தியதும் தனது அறிவை இழக்கிறான். மயங்குகின்றான். உடல் பலவீனமடைகிறது. உள்ளம் கெட்டு விடுகின்றது. தன்னால் உறுதியாக நிற்க முடியாமல் ஆடி அசைந்து விழுகின்றனர். அதன் பின் அவனுக்கு ஏற்படும் எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் அறியாமல் இருக்கின்றான்.
போதைக்கு ஆளாகுவதற்கு எனக்கு தெரிந்த சில காரணங்கள் :
1. வீட்டுச் சூழல், 2. சமூக சூழல், 3. காதல், குடும்பம், சினிமா.,
வீட்டுச் சூழல்
வீட்டுச் சூழலிருந்து பல பிள்ளைகள் போதைக்கு ஆளாகுகின்றார்கள். தந்தை சிகரட் புகைப்பவராக இருந்தால், அந்த சிகரட்டை வாங்குவதற்கு பிள்ளையிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். அந்தப் பிள்ளை தந்தையுடைய புகைத்தல் “ஸ்டைலை” பார்த்து நாளடைவில் அதனை திருட்டுத் தனமாக புகைக்க ஆரம்பிக்கின்றது.
வீட்டில் எதேனும் விழாக்கில் நமது சக நண்பர்களுடன் சேர்ந்து பிள்ளைகளின் விளைவுகளைப் பற்றி அஞ்சாமல் மது பயன்படுத்த ஆரம்பிக்கின்றார்கள். மேலும் விடுகளில் மார்க்க போதனைகள் இல்லையாயின் நிலமை மோசமாகி விடும்.
சமூக சூழல்
வீட்டுச் சூழலில் பயன்படுத்திய போதைபொருட்களை நமது பிள்ளைகள் நாளடைவில் சமூக சூழலில் சக தோழர்களுடன் பழகிக் கொள்ள முனைகிறான். சில வேளை வீட்டுச் சூழலில் சிகரட் புகைத்தல், மது அருந்துதல் போன்றவை இல்லாவிட்டாலும் சமூக சூழலில் அவை விற்பனைக்கு இருக்குமாயின், அவை பயன்படுத்தக் கூடிய பிள்ளைகள் இருப்பார்களாயின் அப்பிள்ளைகளுடன் பழகக் கூடியவர்களும் போதைக்கு ஆளாகிவிடுவார்கள். கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் போதைக்கு ஆளான பல சம்பவங்களில் நாம் பார்த்து இருப்போம்..
காதல், குடும்பம், சினிமா
காதல் தோல்வி, குடும்பத் தகராறு, வாழ்வில் தோல்வி, வேலையின்மை, விரக்தி, நண்பர்களுக்கிடையிலான உறவில் விரிசல் போன்ற காட்சிகளில் கதாநாயகன் நாடக் கூடிய முதல் தீர்வு சிகரட் புகைப்பது, மது அருந்துவது என்பதைத்தான் இந்த சினிமா மற்றும் நாடகங்களில் காட்டப்படுகின்றது. அது போல் கதாநாயகன் பல்வேறு ஸ்டைல்களில் புகைத்து காட்டுவதும் இதற்கான மற்றொரு காரணமாகும்.
உங்கள் வீட்டில் இது போன்று யாரேனும் இந்த தீய பழக்கத்தில் இருந்து விடுபட தகுந்து உளவியல் ஆய்வாளர்களிடம் அழைத்து சென்று தகுந்த மருத்துவ மனோதத்துவ சிகிச்சை அளித்து அவரை மீட்கலாம்.
பிள்ளையின் மீது அதிக அன்பு காட்டி ஏமாந்து போகாமலும் அதிக கோபத்தையும் வெறுப்பையும் காட்டி ஒதுக்கி விடாமலும் நடுநிலையுடன் நடந்து, பிள்ளையின் வாழ்வை சீர் செய்ய முனைய வேண்டும். எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. அதனை சரியாக தேடிக் கொள்ளவே வழி காண வேண்டும்.
நமதூர் மாணவர்களின் இந்நிலைக்கு ஊர் மக்களாகிய நாமும் பொறுப்பேற்று கவலை கொள்ள வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்று கூடி கவனம் கொடுத்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவிபுரிவானாக ஆமீன்.....
குறிப்பு : இதுபோன்ற காரியங்களை செய்கின்ற சிலருக்கு இப்பதிவு அந்த சிலர் நாளை பலராக மாறிவிட கூடாது என்பதற்காகவே.......!!!!!

No comments
Post a Comment