முஸ்லிம் பள்ளிவாயல்களை அடிப்படையாக வைத்து பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்- ஜனாதிபதி

இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு கடும் போக்காளர்கள் சதி செய்கின்றார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

மட்டக்களப்பு - ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் நுற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் மக்கள் சமாதானமாக வாழ்வதை விரும்பாத சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். திடீரென புத்தர் சிலை அல்லது பௌத்த விகாரை, இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிவாயல்களை அடிப்படையாக வைத்து பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.

பௌத்தம், இந்து, இல்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத போதனைகளில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. ஒவ்வொரு பிரச்சினைகள் ஏற்படும்போதும் சம்பந்தபட்ட எல்லோரும் முன்னே வருவதால் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

இந்த சிறிய நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும். இந்த சகோதரத்துவத்தை உருவாக்குவதற்கு அரசியல்வாதிகளால் மாத்திரம் முடியாது, அனைத்து தரப்பினருடனும் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். பௌத்த, இந்து, இல்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்கள் ஒன்றிணைந்து பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

சர்வதேச வெசாக் தின விழாவில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளார். வெசாக் தின இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்ள நேபால் நாட்டின் ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.

இந்திய பிரதமர் பல ஒப்பந்தங்கள் செய்வதற்கு வருகை தரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரப்பட்டு வருகின்றன. அவர் வேறு எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.