மரண பயத்தில் ‘ஞானசார’ பாதுகாப்புக்கு ‘உத்தரவாதம்’ கோரும் பொதுபல சேனா!

ஞானசாரவை சிறையிலடைத்து அங்கு பாதாள உலக பேர்வழிகளை ஏவி விட்டு அவரைக் கொலை செய்ய சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளதனால் அவரது பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது பயங்கரவாத பொது பல சேனா அமைப்பு.

அண்மைக்காலமாக இனவாதம் மற்றும் வெறுப்பூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஞானசார தற்போது வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நிலையில் மறைந்து வாழ்கிறார். எனினும், எதிர்வரும் 31ம் திகதி வழக்கு விசாரணைக்கு அவர் கட்டாயம் சமூகமளிப்பார் என நேற்றைய தினம் நீதிமன்றில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் ஞானசாரவை எந்நேரமும் கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையிலேயே ஜனாதிபதிக்கு இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ள அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த, ஞானசாரவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னரும் ஞானசார சிறையிலடைக்கப்பட்டிருந்தமையும் அதன் போது தெமட்டகொட சமிந்த உட்பட பாதாள உலக பேர்வழிகளுடன் நல்ல தொடர்பைப் பேணி வந்தமையும் பிணையில் விடுவிக்கப்பட்டு சற்று காலம் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் தனது இனவாதத்தை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.