முஸ்லிம்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதால் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது !
வில்பத்து காட்டில் வெளிநாட்டு முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டுள்ளனரா என தேடிப்பார்க்க வேண்டும் என ஞானசார தேரர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
பெரும்பான்மை ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் ..
கடந்த வாரம் மியன்மாரில் இருந்து அகதிகள் என்ற போர்வையில் இலங்கைக்குள் வந்துள்ளவர்களுக்காக ரிஷாட் பதியுதீன் சொந்த செலவில் வாகனம் கொடுத்து சட்டத்தரணி அனுப்பியமையை பார்க்கும் போது அதன் பின்னணியில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.வில்பத்து காட்டில் வெளிநாட்டு முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டுள்ளார்களா என தேடிப்பார்க்க வேண்டும்.
'மியன்மார் அகதிகள் பாதுகாப்பு பிரிவினரின் கண்ணில் பட்டதால் அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியானது.இல்லாவிட்டால் அவர்களை வில்பத்து அல்லது கிழக்கில் குடியேற்றி இருப்பார்கள். வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து முஸ்லிம்கள் அகதிகளாக வந்து குடியேறுகின்றனர்.நீர்கொழும்பில் மாத்திரம் 1500 பேர் தங்கியுள்ளனர்.இவர்கள் போதைப்பொருள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால் எமது கலாசாரம் பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு நாடுகளிலிருந்தும் முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்து தங்கியிருக்கிறார்கள். மாலைதீவிருந்து மாத்திரம் இங்கு வந்து 50 ஆயிரம் பேர் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களால் கொழும்பு மீதொட்டமுல்லை குப்பைமேடு போலாகியுள்ளது. எதிர்காலத்தில் மீதொட்டமுல்லை அனர்த்தத்தை விட பாரிய அனர்த்தம் இங்கு ஏற்படும். இந்த விடயங்களை நாம் எடுத்துச் சொன்னால் நாம் சதி செய்பவர்கள், இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிப்பவர்கள் என எம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

No comments
Post a Comment