சவுதி குடியுரிமை’: தவறான தகவல் என ஜாகிர் நாயக் மறுப்பு

இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கிற்கு சவுதி அரேபியா அரசு குடியுரிமை வழங்கியுள்ளதாக வெளியான செய்தியினை அவர் மறுத்துள்ளார்.

கடந்தாண்டு ஜூலை 1ஆம் தேதியன்று, வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவர், இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தன்னை ஊக்குவித்ததாகக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனையடுத்து ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேசன் அமைப்புக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. மேலும் தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம், ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ஜாகிர் நாயக்கிற்கு சவுதி அரேபியா அரசு, அந்நாட்டு குடியுரிமை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை ஜாகிர் நாயக் மறுத்துள்ளார். இது குறித்து அவர், “இது தவறான தகவல். தவறான தகவல்களை எப்படி ஊடகங்கள் வெளியிடுகின்றன?.” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.