ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களின் உணர்ச்சியில் விளையாடுவது நல்லதல்ல!

ஜனாதிபதி மைத்திரி அவர்கள் நான் தூய பௌத்தன் என்று நிரூபிப்பதற்கே முஸ்லிம்களின் உணர்ச்சிகளில் விளையாடுகின்றார்.

முஸ்லிம் மக்கள் எந்த நோக்கத்திற்காக மைத்திரி அவர்களை நாட்டின் ஜனாதிபதி ஆக்கினார்களோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படுகின்றதா என்ற கேள்வி கேட்கப்பட்டால் பதில் எதிர்மாறாகத்தான் இருக்கின்றது.

மஹிந்த ஆட்சியில் போர் முடிவுக்கு வந்ததன் காரணமாக தமிழ் மக்கள் மஹிந்த மீது கடும் கோபமாக இருந்தார்கள், அதே நேரம் இனவாதிகளை அடக்கத் தவறினார் என்ற காரணத்தினால் முஸ்லிம் மக்களும் மஹிந்த மீது கோபமாக இருந்தார்கள், இதன் காரணமாகவே இரு சமூக மக்களும் மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்து மைத்திரி என்ற பொது வேட்பாளரை ஜனாதிபதியாக்கினார்கள்.

ஆட்சி மாற்றத்தினூடாக தமிழ் சமூகம் தீர்வை பெற்றுக்கொள்கின்றதா இல்லையா என்பதை ஒருபக்கம் வைத்துவிட்டு, முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டதா என்ற விடயத்தை அவதானிக்க வேண்டியுள்ளது.

மைத்திரி அவர்கள் ஜனாதிபதியானதன் பிற்பாடு முஸ்லிம் மக்களின் ஆதங்கத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் மாற்றமாகவே நடந்து வருகின்றார் என்ற உண்மை தெறிந்தும், அதனை ஆதரித்த மக்களும் அதனோடு ஒட்டிக்கொண்டுள்ள ஆட்சியாளர்களும், "விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல்" மாட்டிக்கொண்டு திண்டாடுவதைத்தான் காணக்கூடியதாக உள்ளது.

மைத்திரி அவர்கள் எந்த இனவாதி, ஞானசாராவை முஸ்லிம்கள் எதிர்த்தார்களோ அந்த இனவாதி ஞானசாராவை பல முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது மட்டுமல்ல, அவருக்கும் அவரது ஆதரவாளருக்கும் பதவிகளை வழங்கி கௌரவபடுத்தியும் வருகின்றார்.

அதே நேரம் மாணிக்கமடு மாயக்கல்லில் சிலைவைப்பதற்கும் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளார்.

அதேபோன்று மரிச்சிக்கட்டியில் மக்கள் வசிக்கும் இடங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வில்பத்து காடாக மாற்றுவதற்கும் காரணமாய் இருந்துள்ளார்.

அது மட்டுமல்ல ஞானசாரவின் அண்மைக்கால அடாவடித்தனங்களை கண்டும் காணாதவர்போல் இருந்தும்ன வருகின்றார்.
இவருடைய இப்படியான நடவடிக்கைகள் பகிரங்கமாகவே முஸ்லிம் மக்களை ஏமாற்றும் செயல் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது.

இவர் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார் என்பதற்கு காரணம் தெறியாது விட்டாலும், ஒருவிடயம் மட்டும் தெளிவாக தெறிகின்றது,  அது என்ன காரணம் என்றால், அடுத்த முறை அவர் ஜனாதிபதி தேர்தலில் கேட்கபோவதில்லை என்பதாகும்.

தான் சிறுபான்மை மக்களின் ஆதரவில் வந்திருந்தாலும், கடைசி காலத்தில் நான் உண்மையான பௌத்தன் என்று அடையாளப்படுத்திவிட்டு செல்லவே அவர் விரும்புகின்றார் என்ற விடயம் அவருடைய அண்மைக்கால செயல்பாட்டின் மூலம் தெறிந்து கொள்ளலாம்.

சிங்கள மக்கள் நினைக்கின்றார்கள் சிறுபான்மை மக்களின் வாக்குகளினால் வந்தவர்தான் இந்த ஜனாதிபதி மைத்திரி அவர்கள், அவர் அவர்களுக்கு சார்பாகவே  நடந்து கொள்வார் என்ற எண்ணம் அவர்களின் மத்தியிலே இருக்கின்றது என்ற காரணத்தினால், அந்த எண்ணம் பிழையானது என்று சிங்கள மக்களிடம் நிரூபிப்பதற்கே அவர் முயற்சிக்கின்றார் என்பதே உண்மையாகும்.

ஜனாதிபதி அவர்களுடைய இந்த எண்ணத்திற்கு முஸ்லிம்கள்தான் பழியாகி கொண்டுவருகின்றார்கள் என்ற உண்மை, நமது முஸ்லிம் மக்கள் பெரும்பாலானோர்கள் இன்னும் அறியாமல் இருக்கின்றார்கள் என்பதே வேதனைப்பட வேண்டிய விடயமாகும்.

இந்த விடயங்கள் அத்தனையும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும், தெரிந்தும் என்ன செய்வது என்ற "ஆப்பிழுத்த குரங்கின்" கதைபோன்று மாட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.

ஆகவே, முஸ்லிம் சமூகம் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக மாட்டிக்கொண்டு இருப்பதையே சுட்டிக்காட்டி நிற்கிறது, இன்றய ஜனாதிபதி மைத்திரியின் செயல்பாடுகள் என்பதுதான் யதார்த்தமாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை...

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.