விகாரையை சூழவுள்ள முஸ்லிம்கள் எங்களுடன் அந்நியோன்னியமாக பழகுகிறார்கள்- தம்மபாலு தேரர்!
பொதுபல சேனா, சிங்கள ராவய, சிங்ஹலே அமைப்புகளின் பௌத்த தேரர்கள் அண்மையில் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள ஓனேகம பகுதிக்கு சென்று, சின்னவில்பட்டி பகுதி முஸ்லிம்களை வெளியேறுமாறு கூறியுள்ளதுடன், இஸ்லாமிய விரோத கருத்துகளையும் தெரிவித்திருந்தனர். இதனால் அங்கு பதற்றநிலை காணப்பட்ட நிலையில், இன்று சனிக்கிழமை (20) அப்பகுதிக்கு விஜயம்செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்குள்ள விவசாயிகளின் களநிலவரங்களை நேரில் கண்டறிந்துகொண்டார்.
அதன்பின்னர் கதுருவெல ஜயந்தி பிரிவேன விகாராதிபதி தம்மபால தேரரை சந்தித்த ரவூப் ஹக்கீம், இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறுகின்ற இவ்வாறான இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த தம்மபாலு தேரர், வெளி பிரதேசங்களிலிருந்து வந்த சில பௌத்த தேரர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இங்குள்ள பௌத்த தேரர்கள் சுமூகமான முறையில் நடந்துகொள்வதாகவும் தெரிவித்தார். எங்களது விகாரையை சூழவுள்ள முஸ்லிம்கள் எங்களுடன் அந்நியோன்னியமாக பழகுகிறார்கள், இனிவரும் காலங்களில் இவ்வாறான இனவாத கருத்துகளை பரப்புவோர் இங்கு வருவதை அனுமதிக்க மாட்டோம் என்றும், இங்குள்ள முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments
Post a Comment