முஸ்லிம் சமூகம் பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
சிறுபான்மை இனத்தின் விடுதலைக்காக போராடியவர்களின் துப்பாக்கிகள், இன்னுமொரு சிறுபான்மை இன மக்களின் பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்தது.
அவர்களின் கணக்கிட முடியாத உடைமைகளை சூரையாடியது. அவர்களை உடுத்த உடையோடு அவர்களது தாயகத்தை விட்டும் அகதிகளாக விரட்டியது. அவர்களில் சிலரின் பெயருக்கு முன்னாள் அஷ்ஷஹீட் எனும் நாமத்தையும் சேர்த்துச் சென்றது.
1987 ம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தந்தின் பிரகாரம் வடக்கும் கிழக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே முஸ்லிம்கள் தமிழர்களின் அடக்கு முறைகளினால் பாரிய அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.
குறிப்பாக தமிழர் அரசியல் தலைமைகள், தமிழ் ஆயுதக் குழுக்கள், தமிழ் அரச நிர்வாகம் முஸ்லிம் மக்களின் மீது அதிகார அடக்கு முறைகளை கையாண்டனர்.
இதுவே என்றும் மீளிணைக்க முடியாத தமிழ் – முஸ்லிம் உறவு விரிசலின் தொடக்கப்புள்ளி ஆகும். இதுவே படிப்பினைக்குறிய கடந்த கால வரலாறும், வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம் சமூகம் எதிர்ப்பதற்கான முக்கிய காரணமுமாகும்.
வடக்கு கிழக்கு அதிகாரப்பகிர்வு பற்றி பேசுவதற்கு முன்பாக தொடர் இனமுரன்பாட்டினால் வீழ்ந்து கிடக்கும் தமிழ் - முஸ்லிம் உறவு பற்றி பேசப்பட வேண்டும்.
தமிழ் – முஸ்லிம் உறவு என்பது அடிமட்டத்தில் இருந்து உருவாக வேண்டியது. வடக்கு கிழக்கில் இணைந்து வாழும் தமிழரும் முஸ்லிமும் சமூக, சமய, அரசியல் விடையங்களில் ஒற்றுமைப்பட வேண்டும். அவர்களிடையே இனநல்லுறவு மேலும் விருத்தியடைய வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் ஐயாவுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் அப்துர்ரஹ்மான் ஐயாவுக்கும் இடையில் எத்தனை பேச்சுக்கள் நடந்தாலும், எத்தனை உடன்படிக்கைகள் நடந்தாலும் அதனால் இனநல்லுறவு விருத்தியடையாது.
எனவே, அரசியல் தீர்வுத்திட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வருகின்ற போது வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற இரு பிரதான இனங்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வையே முன்வைக்க வேண்டும். அதுவே வெற்றிகரமானதாகவும் அமையும்.
தமிழர்கள், முஸ்லிம்களை புறக்கணித்து ஏதாவது ஒரு தீர்வை திணிப்பார்களாயின் அதனை முஸ்லிம் தலைமைகள் ஏற்றுக்கொள்வார்களாயின் அதனால் மேற்குறிப்பிட்ட நல்லிணக்கம் ஏற்பட மாட்டாது.
மாறாக, இன்னும் நம்பிக்கையீனங்களும் முரண்பாடுகளுமே உருவாகும். அது இனங்களுக்கிடையே மீண்டும் ஒரு முரண்பாட்டை இன மோதலை தோற்றுவிக்கும்.
கடந்த கால வரலாற்றில் இருந்து முஸ்லிம் சமூகம் பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
eravur jzeel

No comments
Post a Comment