ராஜிதவின் பதவியை யாப்பாவுக்கு வழங்க வேண்டும்: ஜனாதிபதியிடம் கோரிக்கை

அமைச்சரவை இணைப் பேச்சாளர் பதவியிலிருந்து ராஜித சேனாரத்னவை நீக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய சில அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படும் புதிய பதவி தொடர்பில், அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித வெளியிட்ட கருத்தால், கொழும்பு அரசியலில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்படி விவகாரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலர் நேற்று இரவு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை இணை பேச்சாளர் பதவியிலிருந்து, ராஜித சேனாரட்னவை நீக்கி, அவருக்கு பதிலாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவை அந்தப் பதவியில் நியமிக்குமாறு சு.க. அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.