பாராளுமன்ற எதிர்கட்சியில் ஒரு முஸ்லிம் உறுப்பினறும் இல்லாமையே பிரச்சினைக்கு காரணம்!
அரசாங்கம் முஸ்லிம்களை பற்றி
கணக்கில் எடுப்பதில்லை மாறாக தமிழ் கூட்டமைப்பை திருப்தி படுத்துவதிலேயே ஜனாதிபதியும், பிரதமரும் விருப்பமாக உள்ளனர் என துணிந்து உண்மை பேசும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஏன் இன்னமும் அரசாங்கத்தில் ஒட்டியிருக்க வேண்டும் என சிலர் சமூக வலையத்தளங்களில் கேட்கிறார்கள். எதிர்த்தரப்பு அரசியலை ஏற்றுக்கொண்டு அதற்கும் ஆதரவு தரும் மனப்பக்குவம் இன்னமும் முஸ்லிம்களிடம் ஏற்படாத நிலையில் முஸ்லிம்களின் தேசியத்தலைமையான அமைச்சர் ரிசாத் பதியுதீன் அரசாங்கத்திலிருந்து விலகுவது தீர்வாக அமையாது என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும்.
பொதுவாக தமிழ் மக்கள் மத்தியில் அமைச்சர்கள் இருக்கும் கட்சிக்கும் மக்கள் வாக்களிக்கிறார்கள். அதே நேரம் அமைச்சு பதவிகளோ சேர்மன் பதவிகளோ இல்லாத அவற்றை பெற்றுத்தர முடியாமல் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பக்கூடிய, அறிக்கை மட்டுமே விடக்கூடிய அரச எதிர் கட்சிகளையும் தமிழ் மக்கள் பலப்படுத்தி வருவதனால் சிங்கள அரசுகள் தமிழ் எதிர் அரசியல் கட்சிகளை மதிக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் சமூகமோ அரசியல் செய்வது என்றால் பொருள் ரீதியில் என்ன இலாபம் கிடைக்கும் என வர்த்தக ரீதியாகவே இன்னமும் சிந்திக்கிறது.
இந்த அரசியல் களத்தில் உலமா கட்சியாகிய நாம் மஹிந்த காலத்திலும் மூன்று வருடங்கள் எதிர் கட்சியாக செயற்பட்டோம். இந்த அரசிலும் செயற்பட்டோம். உயிரை பணயம் வைத்து சமூகத்துக்காக குரல் எழுப்பினோம். ஆனால் இந்த சமூகம் எம்மை ஆதரிக்கவில்லை. காரணம் எம்மை ஆதரிப்பதனூடாக பதவியோ, பகட்டோ பொருளோ கிடைக்காது என்ற ஒரேயொரு காரணம் தவிர வேறு இல்லை. ஆனால் அமைச்சர்களின் கட்சி என்றால் அத்தனை பேரும் பல் இளித்துக்கொண்டு பின்னால் ஓடுகிறார்கள்.
முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமே பாராளுமன்றத்தின் எதிரணியில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை என்பது நாம் சொல்கின்ற விடயத்துக்கு மிகப்பெரிய சாட்சியாகும். அனைத்து இனங்களுக்கும் பாராளுமன்றத்தின் எதிர் தரப்பில் உறுப்பினர்கள் இருக்கும் போது முஸ்லிம்களுக்கு மட்டுமே எதிர் தரப்பு கட்சி இல்லை என்பதன் மூலம் முஸ்லிம்கள் எத்தனை அடி உதை வாங்கினாலும் அரச சார்பு கட்சிகளுடன் இருப்பதையே பெருமையாக நினைக்கின்றனர் என்பதை ஆளுந்தரப்புக்கள் புரிந்து வைத்துள்ளன.
இந்த நிலையில் அமைச்சர் ரிசாத் அரச பதவிகளை உதறிவிட்டு எதிர் தரப்புக்கு சென்றால் அவரை எள்ளி நகையாடுவதில்தான் இந்த சமூகம் முன்னிற்குமே தவிர அவரை ஏற்றுக்கொள்ளாது. அதுவும் அரச எதிரணி என்பது பாரளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலேயே உள்ளது என்பதால் மஹிந்தவுக்கும் ரிசாதுக்கும் முடிச்சை போட்டு எம்மை கேவலப்படுத்தியது போன்று அவரையும் எள்ளி நகையாடும்.
ஆகவே அமைச்சர் ரிசாத் அரசுக்கு முட்டுக்கொடுப்பதிலிருந்து விலக வேண்டும் என சொல்வதை விட இந்த சமூகத்துக்கு பற்று இருந்தால் அரச பதவிகள் எதையும் பெறாமல் சமூகத்துக்காக குரல் எழுப்பும் உலமா கட்சி போன்ற கட்சிகளுக்கு ஆதரவுக்கூட்டங்கள் நடத்த முன் வர வேண்டும். அதில் சமூகம் முணைப்புக்காட்டினால் பதவி இல்லா அரசியலை சமூகம் ஆதரிக்கிறது என்பது புரியப்படும் போது அமைச்சர் ரிசாத் போன்ற உண்மையான சமூகப்போராளிகளும் களத்தில் குதிப்பர்.
ஆகவே சமூகம் தன்னை தானே பக்குவப்படுத்த முனையாமல் அமைச்சர் ரிசாத் பதியுதீனை மட்டுமே குறிவைத்து அவர் அரசிலிருந்து வெளியேற வேண்டும் என சொல்வது இனவாதிகளுக்கு தீனி போடும் செயலாகும் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும்.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
உலமா கட்சித்தலைவர்

No comments
Post a Comment