பாணந்துறை பழைய வீதி பஸார் பள்ளிவாயல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்.

2017/05/16 ம் திகதி அதிகாலை 3.00மணியலவில் பள்ளி வாயலுக்கு பின்புறமாக உள்ள யன்னல் வழியாக மேல்மாடியின் கண்ணாடியை உடைத்து பெற்றோல் குண்டு வீசி எரியப்பட்டு பள்ளி வாயல் தீப்பற்றி மேல்மடியிற்கு ஏறும் பகுதி சேதம் ஏற்பட்டுள்ளது                   2014/06/15ம் திகதி களுத்துறை மாவட்டத்தில் பேருவளை அளுத்கமை பிரதேசத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது பாணந்துறை NOLIMIT தீயிட்டுக் கொழுத்தப்பட்ட போது கூட அல்லாஹ்வின் இந்த மாலிகைக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை ஆயினும் இப்பள்ளி வாயல் அமைந்துள்ள பகுதியில் முஸ்லிம்களின் வீடு வாசல் இல்லை ஆனால் முஸ்லிம் வியாபாரிகளுக்குரிய கடைகள் 50ற்கும் மேல் உள்ளது இவ் அல்லாஹ்வின் இல்லத்தைப் பாதுகாத்து வருவதும் இவ்வியாபாரிகளே இவர்கள் கூட இவ் விடயத்தைக் கண்டும் கானாத்தைபோல் இருந்துள்ளார்கள் இதை அயலில் உள்ள இப்பள்ளி வாயிலுக்கு மதிப்பளிக்கும் சிங்கள சகோதரர்களே அப்பகுதி பொலீஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறியப்படுத்தி உள்ளனர் பின்னர் இதை மூடிமறைக்க எத்தனித்த கடைவீதி பள்ளி நிர்வாகத்தின் உறுப்பினர்கள் செய்வதரியாமல் இரகசியமாக பிரச்சினையை பொலீஸ் மூலம் தீர்க்க முற்பட்டுள்ளனர் ஆயினும் பொலீஸ் அதிகாரிகள் பள்ளி வாயலுக்கு வருகை தரும்தருவாயிலே ஐவேளை அல்லாஹ்வின் வணக்கஸ்தளத்திற்குதொழுகைக்கு வரும் ஜமாத்தார்கள் கண்டு கொண்டுள்ளார்கள் இதன் பிறகே இவ்விடயம் கசியத்தொடங்கியுள்ளது ஆனாலும் பள்ளி நிர்வாகம் இதை வெளியில் தெரிய விடாமல் இருக்க மேல்மாடியிற்கு ஏறும் வழியை மூடி மறைந்துள்ளர்கள் இதற்கிடையில் அப்பள்ளி வாயலில் கடமை புரியும் ஒருவர் இதை புகைப்படம் எடுக்கும் போது பள்ளி நிர்வாக trustee board அங்கத்தவர்கள் இதைத்தடுத்து நிறுத்தி உள்ளார்கள் அப்புகைப்படங்களை அழிக்குமாறும் வற்புறுத்தி உள்ளனர் காரணத்தை வினவியபோது வெளியான செய்திதான் இந்த நிர்வாகம் நல்லாட்சியியை கொண்டு வருவதற்கு முக்கிய கதாபாத்திரத்தை கையில் எடுத்தவர்கள் என்பதை பள்ளி  ஊழியர் அறிந்து கொண்டுள்ளார்

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.