அஹிம்சை ரீதியாக போராடினாலும் கூட தீவிரவாத முறியடிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்!
உத்தேச தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு வெளியிடுவதாக புத்திஜீவிகள் ஆய்வாளர் கிஹான் குணதிலக தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தின் கீழ், சாதாரண ஆர்ப்பாட்டக்காரர்களைக் கூட கைது செய்து, நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்க வாய்ப்பிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள பயங்கரவாத தடை சட்டத்திலும் பார்க்க, தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலத்தில் சில முன்னேற்றங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இதன் கீழ் தேசிய பாதுகாப்பு, அரசாங்கம், இறைமை, ஒரேநாடு போன்ற விடயங்களுக்கு சவால் விடும் எந்த செயற்பாடும் தீவிரவாத செயற்பாடாகவே பார்க்கப்படுவதாகவும் கிஹான் குணதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் வன்முறையின்றி அஹிம்சை ரீதியாக போராடுகின்றவர்கள் கூட தீவிரவாத முறியடிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படும் நிலை ஏற்படும் என்று புத்திஜீவிகள் ஆய்வாளர் கிஹான் குணதிலக தெரிவித்துள்ளார்

No comments
Post a Comment