ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் அட்டாளைச்சேனையில் போக்குவரத்து பஸ் மீது கல்வீச்சு!
இன்று 2017.05.24 - புதன்கிழமை இனவாத செயற்பாடுகளை கண்டித்து ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாகவும் வேறு சில பதிவுகளில் நாளை வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுவதாகவும் முகநூல்களில்களில் காணக்கூடியதாக இருந்தது.
இந்த ஹர்தாலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பை எந்த அமைப்பு விடுத்துள்ளது தொடர்பில் இதுவரை எதுவித உத்தியோகபூர்வ அறிவித்தல்களையும் என்னால் காணக்கூடியதாகவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பொதுப் போக்குவரத்தை தடைசெய்யும் வகையில் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு பயணிகள் பஸ்களுக்கு கல் வீச்சும் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது.
ஹர்த்தால் போட்டு டயர்கள் எரிப்பதாலும் கல் வீசுவதாலும் இதுவரை சாதிக்கப்பட்ட விடயங்கள்தான் என்ன? எட்டிய தீர்வுகள்தான் என்ன?
ஹர்த்தால் போடுவதை யாரும் குறை கூறுவதற்கில்லை. ஹர்த்தாலை வைத்து நாம் அரங்கேற்றும் விரும்பத்தகாத விடயங்கள் மாற்று மத சகோதரர்கள் மற்றும் அரசாங்கத்தின், முஸ்லிம்கள் மீதான வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். நமது நியாயமான கோரிக்கைக்கு தீர்வுகளை பெற்றுத்தர முயற்சி செய்பவர்களுக்கும் இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம்களின் நன்நடத்தையை கேள்விக்குட்படுத்தும்.
எனவே ஹர்த்தால் என்ற போர்வையில் நாம் வீதிக்கு இறங்கி நடாத்தும் அடாவடித்தன செயற்பாடுகளை விடுத்து அமைதியான முறையில் கண்டனப் பேரணிகளை நடாத்துதல் கண்டன கூட்டங்களை நடாத்துதல் போன்ற சாத்வீக முன்னெடுப்புகளை செய்வதே சாலச் சிறந்ததும் புத்திசாதுர்யதுமான செயற்பாடாகும்.
எம்.ஐ.சர்ஜூன்
சாய்ந்தமருது.

No comments
Post a Comment