சம்பிக்கவின் ஜனாதிபதி கனவே இனவாதிகளின் முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு காரணம்!

ஒருபக்கம் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் என்ற  கனவில் சம்பிக்க  காய்களை நகர்த்தி இனவாத தீயை மூட்டிக் கொண்டிருக்கின்றார்..

மறுபக்கம் இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளுன் தொடர்புடையதும், அங்கு நடந்த முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான, மத மற்றும் சாதிக் கலவரங்களைத் தலைமை தாங்கியதும்,  தனது வரலாறு முழுக்க இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துததும்.  இன்று மாடுகளின் பெயரால் ஒடுக்கப்பட்ட சாதிகளையும், முஸ்லீம்களையும், விவசாயிகளையும் சட்டம் போட்டே ஒடுக்குகின்றதும். மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே அங்கம் வகித்த இந்துத்துவ பாசிச அமைப்புகளான இந்துமகாசபா மற்றும் RSS (Rashtriya Swayamsevak Sangh) அமைப்புகளின் வழி வந்த  சிவசேனா என்ற அமைப்பு இலங்கையில் அதனுடைய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வமைப்பின் தலைமைக் காரியாலயம் திருகோணமலையில் அமையப்பெற்றுள்ளது,  தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் வை. யோகேஸ்வரன் சிவசேனாவுக்காக‌ வவுனியாவில் ஒரு காரியாலயத்தையும் கடந்த ஆண்டு ஒக்டோபர் 9ம் திகதி திறந்து வைத்தார். அந்த விழாவில் சிவசேனாவின் அமைப்பாளரான மறவன் புலவு சச்சிதானந்தன் கலந்து கொண்டு "இலங்கையில் வாழும் இந்துக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பை தொடங்கினேன்" என்றார்.

இந்தியாவின் இலங்கை மீதான‌ மேலாதிக்கத்தின் அடையாளமே சிவசேனா, மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் மக்களைப் பிரித்து மோத வைப்பதற்கு ஏற்ப, இந்தியா சிவசேனாவை இலங்கையில் தோற்றுவித்திருக்கின்றது. இந்த உண்மையை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாம் முஸ்லிம்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்கள் அனைவரும் இவ்விருவர் விடயத்தில்  மிக்க அவதானத்துடன் செயற்படவேண்டும்.

1-சம்பிக்க ரணவக்க
2-இந்தியாவுடன் கூட்டு வைத்திருக்கும் ரனில்

பாடம் எடுக்க வருபவர்களுக்கு சமர்ப்பணம்!!!

-சபூர் ஆதம்-

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.